Idhayam Matrimony

பாக். தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது: ஜிதேந்திர சிங்

திங்கட்கிழமை, 15 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் இருக்கும் ராஜ்ஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்தத்தை மீறி இந்திய ராணுவ முகாம்கள் மீதும் கிராமங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்  4 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் பல கிராமங்களில் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு மத்திய  அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்று பார்த்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லி திரும்பிய ஜிதேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்று மத்திய பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்  பேட்டியின்போது தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருவதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். மேலும் இந்திய ராணுவத்தினர்களின் பதிலடி கொடுக்கும் விதத்தை அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதற்கு முன்னர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு இந்திய ராணுவம் இந்த மாதரியான பதிலடி கொடுத்ததில்லை என்றும் அந்த பகுதிகள் மக்கள் கூறுகின்றனர் என்று இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். அந்த பகுதியில் வசிக்கும் மக்களையும் நான் சந்தித்து பேசினேன். அப்போது இந்திய ராணுவத்தின் பதிலடி நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்திய ராணுவத்தினரின் இந்தமாதிரியான தாக்குதலை நானும் பார்த்ததில்லை என்றும் சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் ஜிதேந்திர சிங் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்