ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

திங்கட்கிழமை, 15 மே 2017      திருநெல்வேலி

தென்காசி  ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரியில் 24-வது ஆண்டுவிழாவும் விளையாட்டு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது. நல்லமணி கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் மணிமாறன் தலைமையில் தொடங்கப்பட்டது. கல்வி குழுமத்தின் செயலாளர் பத்மாவதி மணிமாறன்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். டாக்டர் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கினார்.  கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

 விளையாட்டு விழா

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அன்னை மருத்துமனை நிறுவனர் டாக்டர் தங்கப்பாண்டியன், செங்கோட்டை சாந்தி நிகேதன் மருத்துமனை நிறுவன் டாக்டர் கிருஷ்ணகுமார், கொடிக்குறிச்சி முன்னாள் தலைவர் முத்தையா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்கினார்கள்.  கல்லூரி ஆலோசகர் டாக்டர்.பி.இராமநாதன் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவினை சிறப்பிக்கும் விதமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக பேராசிரியை மகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை பேராசிரிய, பேராசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்: