முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை கலெக்டர் சி.அ.ராமன், நேரில் சென்று ஆய்வு

திங்கட்கிழமை, 15 மே 2017      வேலூர்
Image Unavailable

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பதை கலெக்டர் சி.அ.ராமன், வேலூர் கிருஷ்ணா நகர் பேருந்து பணிமனை மற்றும் வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

அப்பொழுது அரசு போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் வேலூரிலிருந்து எத்தனை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இய்யக்கப்படுகின்றன என்பதையும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் தனியார் பேருந்துகளில் கட்டணம் சரியாக வசூலிக்கப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பேருந்துகள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது (காலை 10.30 மணி) நிலவரப்படி 53சதவீதம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கவேண்டும். இதனை மீறி அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் உழவர்கள் உற்பத்தி செய்யும் காய் கறிகள், பூக்கள் மற்றும் விவசாய பொருட்களை பேருந்துகளில் அனுமதிக்க தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளை சார்ந்த அரசு பேருந்துகளில் இதுவரை 241 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனகளை சார்ந்த 130 ஓட்டுநர்களை கொண்டு மீதமுள்ள பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களை சார்ந்த 135 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. மாவட்டத்தில் எங்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.மேற்கண்டவாறு கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்,இ.கா.ப., வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்