முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாக குளறுபடியால் ஏற்காடு எகஸ்பிரஸ்அரக்கோணத்தில் தடம் புரண்டது

திங்கட்கிழமை, 15 மே 2017      வேலூர்
Image Unavailable

 

ரயில்வே நிர்வாகத்தினரின் குளறுபடியால் நடுயிரவில் இஞ்சின், உட்பட மூன்று பெட்டிகளுடன் ஏற்காடு எகஸ்பிரஸ் அரக்கோணம் ரயில் நிலையம் முன்பாக தடம்புரண்டது.ஆனால் உயிர் சேதம் தப்பியது. இதனால் மக்கள் பல மணி நேரத்திற்கு போக்குவரத்து பயன்பாடயில்லாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து விவரம் வருமாறு.

தரை தட்டியது

 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் அரக்கோணம ;ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. பொதுவாக இரவு நேரத்தில் அரக்கோணம் மார்கத்தில் அதிக ரயில் சேவை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை நோக்கி அரக்கோணம் வழியாக செல்லும் முதல் ரயிலும், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக செல்லும் கடைசி ரயிலும் ஏற்காடு எக்ஸ்பிரஸ்தான். இவ்வாறு இருக்க நேற்று முன் தினம் இரவு 12.30 மணியளவில் அரக்கோணம் நோக்கி வந்த ரயில் நிர்வாகிகளின் அலட்சிய போக்கால் பயங்கர விபத்திற்கு உட்பட்டது.

அதே நேரத்தில் உயிர் சேதம் முற்றிலுமாக தவிர்க்கபட்டுயிருப்பது சற்று ஆறுதலானது. இந்த பயங்கர விபத்தால் நேற்று காலை அரக்கோணம் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பலமணி நேரத்திற்கு தடைபட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். நேற்று அவதிக்குள்ளான பல பயணிகள் அரக்கோணம் மார்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அதிக அலட்சிய போக்குடனே செயல்படுவதால் விபத்துக்களும் அதிகம் ஏற்படுகிறது என குற்றசாட்டு கூறியுள்ளனர்.

ஏனெனில், மோசூரிலிருந்து, அரக்கோணம் நிலையம், மேல்பாக்கம், சித்தேரி வரையில் நிர்வாக சீர்கேடுகள் அதிகம் உள்ளது இதனால் அவ்வபோது பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது திறமையில்லாமல் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளாலே விபத்து ஏற்படுகிறது. என்று கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வகையிவ் தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களுடன், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்