மழை வேண்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்

திங்கட்கிழமை, 15 மே 2017      தூத்துக்குடி
snkl mini

ங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தை அடுத்து நாகசுனைக்கு பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.  தொடர்ந்து கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றது. 

பலர் பங்கேற்பு

இதில் ஆதிதிராவிடர்நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி, எம்.பிக்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன்,  நெல்லை ஆவின் சேர்மன் ரமேஷ் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆறுமுகம், வேலுச்சாமி, முன்னாள் கவுன்சிலர்  ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


இதை ஷேர் செய்திடுங்கள்: