முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுகிறதா கலெக்டர் பழனிசாமி ஆய்வு

திங்கட்கிழமை, 15 மே 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புதிய பேருந்து நிலையம் மற்றும் காரைக்கால்pல் உள்ள நாகப்பட்டினம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கிளை ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது," ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் அரசுப் பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லா வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி அரசுப் பேருந்துகளை இயக்க கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பொது இடங்களிலும், அனைத்து அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளிலும், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பேருந்துகள் மற்றும் இதரப் போக்குவரத்து வாகனங்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீதும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.;." என தெரிவித்தார். இவ்வாய்வின் போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்