முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் : மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது

திங்கட்கிழமை, 15 மே 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய போக்குவரத்துகழக பனிமனைகளில் வாயிலாக 245 அரசு பேருந்துகள் உள்ளன. இதில்தற்போது115 பேருந்துகள் (45 சதவிகிதம்) இயக்கப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 70 தனியார் பேருந்துகளும் , 23 தனியார் மாற்று பேருந்துகளும் , 58 மினி பேருந்துகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படி மீது கடுமையான நடவடிக்கை காவல்துறை மூலமாக எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள்,வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர், ஒருங்கிணைந்து நிலைமையை கண்காணித்து தொடர்ந்து போக்குவரத்து இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம், மன்னார்குடி அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையம், ஆகியவற்றிக்கு நேரில் சென்று தங்கு தடையின்றி பேருந்து இயக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் வருவாய் கோட்டாட்சியர் திருமதி செல்வசுரபி, முத்துமீனாட்சி, கோட்ட மேலாளர் சிதம்பரகுமார், வட்டாரபோக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்