முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஷார் ஆசாத் ஆட்சியில் இருக்கும்வரை சிரியா பாதுகாப்பாக இருக்காது: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சிரியாவில் பஷார் அல் ஆசாத் அதிகாரத்தில் இருக்கும்வரை அந்நாட்டில் நிலையான மற்றும் பாதுகாப்பன சூழல் ஏற்படாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

பாதுகாப்பான சூழல் இல்லை

இதுகுறித்து வெள்ளைமாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறிபோது, "சிரியாவின் அரசியல் எதிர்காலம் சிரிய மக்களால் சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்று  அதிபர்  டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எண்ணுகிறது. ஆனால் சிரியர்கள் சுதந்திரமாக செயல்படுவது ஆசாத் ஆட்சியில் நினைத்து பார்க்க முடியாதது என்று எங்களுக்கு நன்கு தெரியும். சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையில் சிரியாவில் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படாது.

இணைந்து செயல்பட விருப்பம் 

மேலும் சிரியாவில் அமைதி ஏற்பட ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. அதே நேரத்தில் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் தொடரும்" என்றார்.

சிரியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்