முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட சட்டமுறை ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகம் : முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      கரூர்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம், காதப்பாறை கிராமத்தில் ரூ.1.95 கோடி மதிப்பிலான சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகத்தை நேற்று (16.05.2017) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

நேரலை காட்சி

இவ்விழா நேரலை காட்சியாக மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் நன்றி தெரிவிக்கும் முகமாக தெரிவித்ததாவது:கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் எண்ணிக்கையும், நலவாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. தற்போது வெவ்வேறு இடங்களில் தொழிலாளர் நல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மறைந்த முதல்வர் அம்மா அவர்களி;ன் நல்லாசியோடு தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்து ரூ.1 கோடியே 95 இலட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர் ஆய்வாளர், சார்நிலை அலுவலகங்கள், தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்), எடையளவு சட்ட பரிசோதனைக்கூடம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த புதிய கட்டடங்களை வழங்கியுள்ளார்கள்.

இதனால் கரூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர்கள், பணியாளர்கள், வாரிய உறுப்பினர்களது அலைச்சல் மற்றும் காலவிரையமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடங்களை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். பின்னர், தொழிலாளர் நல வாரிய உறுப்பினராக உள்ள ஒருவர் நன்றி தெரிவித்ததாவது:என் பெயர் உமாதேவி. நான் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரிலிருந்து வர்றேன். நான் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளேன். இதுநாள் வரைக்கும் நல வாரிய அலுவலகமும், ஆய்வாளர் அலுவலகமும் வேற வேற இடத்தில் இருந்ததால் ஒவ்வொரு வேலைக்காகவும், 2 அலுவலகத்திற்கும் மாறி மாறி அலைய வேண்டியிருந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்தேன். இப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் 2 அலுவலகங்களும் ஒரே இடத்தில் தந்திருக்காங்க. எங்களது இன்னல்களை போக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நேரலை நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் டி.குமரன் கரூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர் கோபாலகிரு~;ணன், பொதுப்பணித்துறை கட்டடங்கள் செயற்பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர் தவமணி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்