முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் : காண்காணிப்பு அலுவலர் பனிந்திர ரெட்டி தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடு;பொருட்கள் மானியம், குடிநீர் வழங்கல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்;, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலரும் மாவட்ட காண்காணிப்பு அலுவலருமான பி.பனிந்திர ரெட்டி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் , மாவட்ட கலெக்டர் (பொ) எஸ்.தனசேகரன், ஆகியோர் முன்னிலையில் நேற்று(16.05.2017) நடைபெற்றது.

  நீர்த்தேக்க தொட்டி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட காண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்; மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தினசரி தேவையான குடிநீர் பொது மக்களுக்கு கிடைத்துடும் வகையில் ஆழ்துளாய் கிணறுகள் அமைத்து நீர்தேக்கத் தொட்டி அமைத்தும் குடிநீர் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் மேலும், குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் ஏரி, குளங்கள் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட வறட்சி நிவாரண பணிகள் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரபட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாக மழை பெய்துள்ளதால், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்து, இம்மாவட்டத்திலுள்ள பாசன விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ரொக்கமாக பயிர்கடன், உரம் மற்றும் மும்முனை மின்சாரம் போன்றவைகள் தடையில்லாமல் கிடைத்திட அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலரும் மாவட்ட காண்காணிப்பு அலுவலருமான பி.பனிந்திர ரெட்டி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ம.சந்திரகாசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே.என்.இராமஜெயலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பழனிசாமி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன்(அரியலூர்) டினகுமாரி(உடையார்பாளையம்) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்