முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சரியான முறையில் இயக்கம்: அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை சரியான முறையில் இயக்கப்படுகிறதா என்பதை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (16.05.2017) ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், உள்ளார்.

அமைச்சர் ஆய்வு

 

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :-

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிட்., தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஒரு சில தொழிற்சங்கங்கள் மட்டும் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முறையே 253 அரசு பேருந்துகள் இயக்கத்திற்கு காலை நிலவரப்படி 181 பேருந்துகளும் ஆக மொத்தம் 71மூ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பேருந்துகள் இடையூறின்றி இயக்க அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் 202 மற்றும் தனியார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் 160 ஆகியோர் மூலம் பொதுமக்களுக்கு பேருந்து வசதி சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. நாளை 100மூ பேருந்து இயக்கத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும், நமது மாவட்டத்தில் 6 டிப்போக்கள் உள்ளன. தருமபுரி (நகர பேருந்து மற்றும் புறநகர் பேருந்து நிலையம்), பென்னகாரம், பாலக்கோடு, அரூர், பொம்மிடி என அனைத்து பேருந்து நிலையத்திலும் உள்ள காவல்துறை, வருவாய் துறை, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மூலம் வட்டாட்சியர்கள் அந்தந்த பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் புறநகர் பேருந்துகள் 160 வழித்தடங்களிலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பயணிகள் நல்ல முறையில் எவ்விதமான அச்சமின்றி பயணம் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் இந்த போராட்டத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் நல்ல முறையில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகிறார்கள். மேலும் தனியார் பேருந்துகளில் வரும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077, 1800 425 1071, 1800 425 7016 மற்றும் வாட்ஸ்அப் எண் 8903891077 இந்த தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் இராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி முன்னாள் நகரமன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்; பொன்னுவேல், உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்