முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்த அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

 பேருந்து இயக்கம் குறித்து

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றுமதியம் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். இங்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து கேட்டார். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அந்தந்த ஊர்களுக்கு உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் அரசு பஸ் டிரைவர்களிடம் நேரில் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

பேச்சு வார்த்தை

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்ததால் பிரச்சனைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்ச பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதற்கட்டமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.750 கோடி வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

1250 கோடி

அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொழிலாளர்ளின் பிரச்சனையை தெரிவித்ததும் மேலும் ரூ.500 கோடி சேர்ந்து ரூ.1250 கோடி வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரச போதிய நிதியை வழங்க முன்வந்தும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பொதமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

70 சதவீத பஸ்கள் இயக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 313 வழித்தடங்களில், 212 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தூத்துக்குடியில் நான், கலெக்டருடன் சென்று ஆயவு நடத்தினேன். அதே போல் திருச்செந்தூரில் மொத்தமுள்ள 47 வழித்தடங்களில் 41 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நாளைக்குள்(இன்று) அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். இதில் அனுபவமுள்ள டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்து தான் பஸ்களை இயக்கி வருகிறோம். இதுவரை எதுவும் அசம்பாவிதங்கள் இல்லை.

திட்டத்திற்கு அனுமதி

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இத்திட்ட கோப்புகளை மத்திய அரசு அனுமதிக்காக னுப்பிவைத்துள்ளோம்.. இதன்படி திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படயுள்ளது. இதன்மூலம் 100 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்க மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கே 70 எம்.எல்.டி குடிநீரே தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது.

ரூ.5 கோடியில் புது பஸ் ஸ்டாண்டு

திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி நடக்கும் போது அனைத்து தரப்பு வணிகர்கள், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு அதன்பின்னரே திட்டம் செயல்படுத்தபடும். கோவில்பட்டியில் ரூ.5 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் போது அனைத்து தரப்பினர் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே போல திருச்செந்தூரிலும் அனைத்து தரப்பினரும் கருத்துகளை அறிந்த திட்டம் நடைமுறைக்கும் வரும். அதே போல் திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொள்வோம்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கே 123 எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளது. எங்களிடம் பிரிந்து சென்றவர்கள் ஒரு அணிதான். அவர்கள் எப்போது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நாங்கள் உள்ளோம். வருவது அந்த அணியில் உள்ளவர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பலர் பங்கேற்பு

அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., அம்மா அணி செயலாளர் செல்லப்பாண்டியன், ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், உடன்குடி ஆயிஷா கல்லாசி, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வடிவேலு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட துணை மேலாளர் பழனியாண்டி, திருச்செந்தூர் கிளை மேலாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்