புதுவை சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      புதுச்சேரி
AIADMK walk out in Puducherry Assembly

மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் துணைநிலை ஆளுநர் தனது பதவியின் மாண்புகளை மறந்து மலிவு விளம்பரம் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசிற்க்கும், மாநில அரசிற்க்கும் பாலமாக இருக்கவேண்டிய துணைநிலை ஆளுநர் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் நோக்கில் பேசி வருவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்திப்பதே கிடையாது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னை சந்திக்க தினந்தோறும் வருவதாக தவறான தகவல்களை கூறி வருகிறார். மேலும், வளர்ச்சி பணியில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இல்லை என்றும் பேசி வருகிறார்.

 எதிரான செயல்

சட்டமன்றமே ஒன்று கூடி முடிவெடுத்த ஒரு பிரச்சனையில் சட்டமன்ற நடவடிக்கை தவறு என்றும், சட்டமன்ற உறுப்பினரை அவமதித்த அதிகாரி மீது சபாநாயகரால் வழங்கபட்ட தீர்ப்பே தவறு என்றும், நேர்மையான அதிகாரியை சபாநாயகர் பழிவாங்கிவிட்டார் என்றும் தனது டுவிட்டரில் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது தான் வகிக்கும் துணைநிலை ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இது, தான் துணைநிலை ஆளுநராக பதவி ஏர்க்கும்போது எடுத்துக்கொண்ட ரகசிய உறுதிமொழிக்கு எதிரான செயலாகும்.


உரிமை கிடையாது

டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர், மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதையும், சட்டசபை உரிமை மீறல் கமிட்டி மற்றும் சபாநாகரின் தீர்ப்பை விமர்சனம் செய்யும் ஆளுனருக்கு இந்த சபையில் உரையாற்றும் உரிமை கிடையாது.

ஆளுனரை கண்டித்து வெளிநடப்பு

எனவே, மக்கள் பிரதிநிதிகளை அவமதித்த திணைநிலை ஆளுனரை கண்டித்தும், தங்களின் செயல்படாத தன்மையை மூடி மறைக்க மத்திய அரசு மீதும், துணைநிலை ஆளுநர் மீதும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது என மத்திய அமைச்சரை வைத்துக்கொண்டு பேசிய முதல்வரின் இரட்டை வேடத்தைக் கண்டித்தும் அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் வெளிநடப்பு செய்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: