முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நிலங்களை மேம்படுத்துதல், கண்மாய்களிலிருந்து வண்டல் மண் எடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வேளாண்;மைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு விவசாய நிலங்களை மேம்படுத்துதல், கண்மாய்களிலிருந்து  வண்டல் மண் எடுத்தல் தொடர்பான  விழிப்புணர்வு முகாம்  மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
  இவ்விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

                                                            வண்டல்,களிமண் என்பது தண்ணீர் நீரோட்டங்களின் மூலம் ஓடை, குளம், கண்மாய்களில் தேங்கும் மண் ஆகும். பண்டைய காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்படும் மண் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன் படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினால் நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தும் பழக்கம் மறைந்து விட்டது. மேலும் வருடந்தோறும் கண்மாய்களில் கோடை காலங்களில் தூர்வாறுவதால் கண்மாயில் சேகரிக்கப்படும் மழைநீர் நன்றாக உறிஞ்சப்பட்டு, நிலத்தின் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

                                                                  விவசாயிகள் இவ்வாறாக சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை தங்கள் நிலத்திற்கு பயன்படுத்துவதனால் நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்பட்டு, நிலத்தின் மண்வளம் மேம்பட்டு, ரசாயன உர பயன்பாட்டினை குறைக்க வழி வகுக்கும். இதனை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் வட்டத்தில் 57 கண்மாய்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 79 கண்மாய்களும், சிவகாசி வட்டத்தில் 17 கண்மாய்களும், சாத்தூர் வட்டத்தில் 36 கண்மாய்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 21 கண்மாய்களும், விருதுநகர் வட்டத்தில் 25 கண்மாய்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 28 கண்;மாய்களும், காரியாபட்டி வட்டத்தில் 55 கண்மாய்களும், திருச்சூழி வட்டத்தில் 134 கண்மாய்களும் என மொத்தம் 452 பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சித்துறை கண்மாய்களிலிருந்து களிமண்,வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கி அரசாணை விருதுநகர் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளார்கள்.
     ஆகவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  நஞ்சை நிலங்களாக இருப்பின் ஏக்கருக்கு 90 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களாக இருப்பின் 75 கன மீட்டர்  வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வண்டல் மண் , சவுடுமண் , கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டரும், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களும் 60 கன மீட்டர் என்ற அளவில் மண் எடுத்துக் கொள்ளலாம்;. விவசாயிகள்; மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்ற  நீர்ஆதாரப்பகுதிகளை தூர்வாரி அதனை அதிகப்படுத்தி, கண்மாயிகளை ஆழப்படுத்தி கரைகள் உயர்த்தப்படும். மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும். இதன் மூலமாக விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்பரட்சியை ஏற்படுத்து முடியும் என்றும்,
  
மேலும், விவசாயம்  , வீட்டு உபயோகம் , மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண் , சவுடுமண் , கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து  பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி , கண்மாய் , குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி , கண்மாய் , குளம்  குறித்த  கிராம கணக்குகளுடனும், மற்றும்; உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றும் பெற்று வருவாய் கோட்;டாட்சியர் அலுவலரிடமோ, வருவாய் வட்டாட்சியர் அலுவலரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவிக்க மைய அலுவலரிடமோ அல்லது  மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும், மேலும், விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயின் பெயர் அல்லது அருகிலுள்ள உள்ள கண்மாயின் பெயர் வெளியிடப்பட்ட மாவட்ட அரசாணையில்; இடம் பெற்றுள்ளதா என்று தெரிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள்; வருவாய் கோட்;டாட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம் போன்ற அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன தகவலை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும்,
       மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு, தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து தருதல், பண்ணைக்குட்டைகள் அமைத்து தருதல், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மழை காலங்களில் உபரியாக வழிந்தோடும் நீரை சேமிக்கும் வகையில் செக் டேம் கட்டிதருதல், மண்கள்; மற்றும் கற்கள் மூலமாக விவசாயிகளின் விவசாய நிலங்களில் வரப்பு கட்டிதருதல் போன்ற திட்டங்களை சிறு, குறு விவசாயிகள் தெரிந்துகொண்டு பயன்மாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
       இவ்விழிப்புணர்வு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், திட்ட இயக்குநர்(ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.பெ.திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் சு.சுப்பிரமணியன், உதவி இயக்குநர்(கனிமம்); கு.அய்யாத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)டே.சத்தியராய், வேளாண்மை அலுவலர் திருமதி.முத்துலட்சுமி உட்பட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அரசு அலுவலர்கள்; மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago