முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து  கொண்டது தொடர்பாக,  திருப்பூர் மாவட்டத்தில், பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்   மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி, ,  முன்னிலையில்   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  தலைமையில் நடைபெற்றது.

பேருந்துகளின் எண்ணிக்கை

இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் 1, திருப்பூர் 2 , பல்லடம், காங்கேயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய கிளை அரசு போக்குவரத்து பணிமனைகளிலிருந்து  இன்று (16.05.2017) இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறித்து  அமைச்சர்  தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  விபரங்கள் குறித்தும் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விபரங்களையும்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  கேட்டறிந்தார்.

மேலும், இன்று (16.05.2017) திருப்பூர் மாவட்டத்தில், சுமார் 85 சதவீதம் அளவிற்கு பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு தமிழ் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திருப்பூர் மாவட்டம் விளங்குகிறது என்றும் நாளை (17.05.2017) 100 சதவீதம் அளவிற்கு பேருந்துகள் இயக்கி தொழில் நகராமான நமது மாவட்டத்தில் அன்றாட பணிகள் பாதிக்காத வகையில்  பொது மக்கள் மற்றும் பயணிகளுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும்  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்க்ள்.

இந்நிகழ்வின்போது, பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைப்பதூர் ஏ.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகர காவல் துணைஆணையர் சின்னச்சாமி இ.கா.ப திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார் , தாராபுரம் சார் கலெக்டர் கிரேஸ்பச்சாவு   உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை, போக்குவரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்