முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்

புதன்கிழமை, 17 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 452 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பில் 452 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பேசியதாவது:- இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற கோட்பாட்டினை கொள்கையாக கொண்டு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். அவர்கள் காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. 

அந்த வகையில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு எண்ணற்ற பெண்கள் பயனடைந்துள்ளனர்.  2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் விலையில்லா 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என  அறிவித்தார்கள்.  அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் சமூக நலத்துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 82லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் விலையில்லா 8 கிராம் தங்கம் உட்பட,  பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் மொத்தம் 452 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  

மேலும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள் உட்பட 14 வகையான மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பான திட்டங்களின் மூலமாகவும், மாணவ, மாணவியர்களின் கடின உழைப்பாலும், ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலின் மூலமாகவும், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த மாவட்ட கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் ரூ.17.19 கோடி மதிப்பில் மொத்தம் 1,140 குடிநீர் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 85 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  இதுதவிர மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் நீர்;வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகளவில் குடிநீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.

     இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனை மேம்படுத்திடும் விதமாக தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  அந்தவகையில் சமூக நலத்துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில் 4,381 பயனாளிகளுக்கு ரூ.19.90 கோடி மதிப்பில் விலையில்லா 4 கிராம் தங்கம் (மொத்தம் 17.524 கிலோ கிராம்) மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,345 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 104 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட 56 பெண் குழந்தைகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.  இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 452 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.  இவ்விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட கலெக்;டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago