முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் உத்தமபாளையம் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி

புதன்கிழமை, 17 மே 2017      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான  1426-ம் பசலி ஆண்டுக்கான  வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடத்தப்பட்டது. மேலும், விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களையும், மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் 17.05.2017 முதல் 25.05.2017 வரை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது. உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட (17.05.2017) இன்று பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1ரூ-2, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட்-1ரூ2, தேவதானப்பட்டி பிட்-1ரூ2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, தேனி வட்டத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி, போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட இராசிங்காபுரம், சிலமலை போ.அம்மாபட்டி  ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டை, மாதாந்திர ஓய்வூதியம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் சம்பந்தம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.
 மேலும், உத்தமபாளையம் வட்டத்தில் 83 மனுக்களும், ஆண்டிபட்டி வட்டத்தில் 114 மனுக்களும், பெரியகுளம் வட்டத்தில் 85 மனுக்களும், தேனி வட்டத்தில் 210 மனுக்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 40 மனுக்களும் என மொத்தம் 532 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-யில் பொதுமக்களால் அளிக்கப்படுகின்ற மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்குள் தகுதி வாய்ந்த மனுக்களுக்குரிய பயன்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் உத்தமபாளையம் வட்டாட்சியர் குமார் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்