முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி அற்புதமான வீரர் - ஸ்டீவன் சுமித் புகழாரம்

புதன்கிழமை, 17 மே 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். 20 ஓவர் தொடரில் புனே அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்ததை அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் டோனியை புகழ்ந்துள்ளார். அவர் ஒரு அற்புதமான வீரர் என தெரிவித்தார்.
இறுதிப்போட்டிக்கு நுழைந்தது குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-

இந்த ஐ.பி.எல். தொடரில் நாங்கள் 3 முறை மும்பை இந்தியன்சை வீழ்த்தி உள்ளோம். இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான இந்த ஆட்டம் முக்கியமானது. முன்னணி வீரர்கள் சிலர் விலகி இருந்தனர். 160 ரன்னுக்கு மேல் குவித்தது. டோனியின் அதிரடியான ஆட்டம் இதில் முக்கியத்துவம் பெற்றது. அவர் ஒரு அற்புதமான வீரர். கடைசி கட்டத்தில் அவர் மிகவும் சிறப்பாக ஆடினார். மனோஜ் திவாரி, ரகானே ஆகியோரது பேட்டிங்கும் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்டுள்ளேன். நாங்கள் திட்டமிட்டு செயல்படுத்தி மும்பை அணியை கட்டுப்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago