முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர்.சிவஞானம் தலைமையில் சிவகாசி வட்ட ஜமாபந்தி

வியாழக்கிழமை, 18 மே 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகாசி உள்வட்டத்திற்குட்பட்ட கிராம வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர்.சிவஞானம்  தலைமையில் நடைபெற்றது.

இந்த தணிக்கையின் போது நேரடியாக பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு,  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

முன்னதாக, விஸ்வநத்தம் ஊராட்சி, சிவகாசி ஊராட்சி, ஆணையூர், ஊராட்சி, மாரனேரி ஊராட்சி, வேண்டுராயபுரம் ஊராட்சி, எஸ்.துரைச்சாமியாபுரம் ஊராட்சி, நாரணாபுரம் ஊராட்சி, வி.சொக்கலிங்காபுரம் ஊராட்சி, கொங்கலாபுரம் ஊராட்சி, வாடி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம கணக்குகளை தணிக்கை செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி) மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் இன்று (18.05.17) தொடங்கி 19.05.17 மற்றும் 23.05.17 முதல் 25.03.17 வரை 5 நாட்கள் நடைபெறும், வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை (ஜமாபந்தி)-யின் போது பொது மக்கள் தங்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மனுக்கள் வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்தார்.

இந்த தணிக்கையின் போது உதவி இயக்குநர் (நில அளவை) திரு.யோகராஜா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) திரு.ராஜா, வட்டாட்சியர் திரு.ஸ்ரீதரன் உட்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago