மேட்டூர் அணையிலுள்ள வண்டல்மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக அதிக அளவில் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்: கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 18 மே 2017      சேலம்
1

 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகிணங்க சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (18.05.2017) மேட்டூர் அணையிலுள்ள வண்டல்மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக அதிக அளவில் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :

ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து காணொலிகாட்சி வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்காணொலிகாட்சியின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகிணங்க சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மேட்டூர் அணையிலுள்ள வண்டல்மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக அதிக அளவில் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக அள்ள தகுந்த இடங்களை அடையாளம்கான துறை அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து எடுக்கயிருக்கும் வண்டல் மண்ணின் அளவு, மேட்டூர் அணையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை, வண்டல் மண்ணை எடுக்க தேவைப்படும் உபகரணங்களின் விபரம் போன்ற வற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த இத்திட்டம் குறித்து மேட்டூர் அணை சுற்றிவுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலத்திற்கு வண்டல் மண்ணின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வளர்கள் மூலம் போதிய விழிப்புணவை ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.விஜய்பாபு, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுறைமுருகன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: