நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் 68 சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு செய்து தகவல்

வியாழக்கிழமை, 18 மே 2017      நாமக்கல்
2

 

நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் சாலைகள் சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு


 

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நாமக்கல் திருச்சி சாலை மாநில நெடுஞ்சாலையில் சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 5.40 கி.மீட்டர் நீளச்சாலை அகலப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்யும் பணியினையும், திருச்செங்கோடு வட்டம், வெள்ளியங்கிரி பட்டறை அருகில் பரமத்தி - திருச்செங்கோடு - ஓமலூர் - சங்ககிரி சாலை மாநில நெடுஞ்சாலையில் சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 கி.மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப்; பணியினையும், திருச்செங்கோடு வட்டம், திருச்செங்கோடு சாலை வெள்ளப்பட்டி – ஆத்தூராம்பாளையம் மாதா கோவில் சாலை சாலைகள் சிறப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில் 800 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை மேம்பாட்டுப்பணி உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து சாலை மேம்பாட்டுப்பணிகளையும் தரமாகவும், அரசின் அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டு சிறப்பாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் 2016-17 ஆம் நிதியாண்டில் சாலைகள் சிறப்பு பழுது பார்;த்தல் திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் சட்டமன்றத்தொகுதியில் ரூ.402.90 இலட்சம் மதிப்பீட்டில் 14 சாலை மேம்பாட்டுப்பணிகளும், சேந்தமங்கலம் சட்டமன்றத்தொகுதியில் ரூ.184.15 இலட்சம் மதிப்பீட்டில் 12 சாலை மேம்பாட்டுப்பணிகளும், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.265.30 இலட்சம் மதிப்பீட்டில் 10 சாலை மேம்பாட்டுப் பணிகளும், பரமத்தி வேலூர் சட்டமன்றத்தொகுதியில் ரூ.228.00 இலட்சம் மதிப்பீட்டில் 11 சாலை மேம்பாட்டுப்பணிகளும், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதியில் ரூ.10.05 இலட்சம் மதிப்பீட்டில் 1 சாலை மேம்பாட்டு பணியும் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் ரூ.409.60 இலட்சம் மதிப்பீட்டில் 20 சாலை மேம்பாட்டுப்பணிகளும் ஆக மொத்தம் 68 சாலை மேம்பாட்டுப்பணிகள் ரூ.1500.00 இலட்சம் (ரூ.15.00 கோடி) மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து சாலை மேம்பாட்டுப்பணிகளையும் அரசின் அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டு சிறப்பாகவும், தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சி.சசிக்குமார், உதவிக் கோட்டப்பொறியாளர்கள் (நாமக்கல்) கே.மாணிக்கம், (திருச்செங்கோடு) கே.கேசவன், உதவிப்பொறியாளாகள் (நாமக்கல்) எம்.தமிழ்அமுதன் (பள்ளிபாளையம்) எ.கோபிநாத் உட்பட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: