முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்புக்கு பணம் வழங்கிய ரஷ்ய அதிபர் புடின்: குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபை தலைவர் கருத்தால் சர்ச்சை

வியாழக்கிழமை, 18 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியின், பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி கடந்த வருடம் ரஷ்ய அதிபர் புடின் தனக்கு  ஆதரவாக செயல்பட டிரம்புக்கு பணம் வழங்கியுள்ளார் என்று கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட்  வெளியிட்ட செய்தியில் இந்தச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கெவின் மெக்கார்த்தி தனது சக பணியாளருடன் பேசிய ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில் மெக்கார்த்தி “ ரஷ்ய அதிபர் புதின், டிரம்ப் மற்றும் ரானா ரோஹ்ராபாச்சருக்கு (குடியரசு கட்சி உறுப்பினர்) பணம் வழங்கியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறார்.

ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ.எஸ் ரகசியங்களை ரஷ்யாவுக்கு அளித்தார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ள நிலையில், டிரம்ப்பை பற்றிய மெக்கார்த்தியின் இந்த பேச்சு அமெரிக்க அரசியலில் பெரும் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்தநிலையில் வாஷிங்டன்போஸ்ட் வெளியிட்டுள்ள ஆடியோ குறித்து கெவின் மெக்கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் விளக்கமும் அளித்துள்ளார், அப்பதிவில், "நான் நகைச்சுவையாக கூறியது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டத்தில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.  முன்னதாக கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் குடியரசுக் கட்சியியைச் சேர்ந்த டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினை பாராட்டி பலமுறை பேசியிருந்தார். டிரம்பின் இந்தப் பேச்சை ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பலரும் விமர்சித்தனர்,.

இந்த நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தியும், டிரம்ப்பின் நடவடிக்கை குறித்து விமர்சித்த ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது டிரம்ப்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்