முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.மடை ஊரணியில் பயனாளிகள் மண் எடுக்கும் பணி கலெக்டர் ஆய்வு

வியாழக்கிழமை, 18 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊரணியில் பயனாளிகள் மண் எடுக்கும் பணியினை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
      தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையினை சமாளிக்கும் விதமாகவும், நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைக்காலத்தில் அதிகளவில் நீரினைச் சேமிப்பதற்கு தயார்படுத்திடும் விதமாகவும் மாவட்டத்தில் உள்ள நீர்; நிலைகளில் வரையறுக்கப்பட்ட அளவில் படிமம் - மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்;நிலைகள் தூர்வாரிக் கொள்ள மாவட்ட சிறப்பு அரசிதழ் வெளியீடு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு அரசிதழில், நீர்நிலைகளில் உள்ள கனிமங்களை தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு பயனடையலாம் எனவும்,  இத்தகைய கனிமங்களை தேவைப்படும் நபர்கள் கனிமம் கிடைக்கும் இடம் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய இடம் ஒரு வருவாய் கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்திலோ இருத்தல் வேண்டும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடமிருந்து சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியர் அல்லது உதவி ஆணையர் (கனிமவளம்) ஆகியோரிடமிருந்து இலவசமாக மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஊராட்சி ஒன்றிய ஊரணிகள் 11, கண்மாய்கள் 2, பொதுப்பணித்துறை பெரிய கண்மாய் 1 ஆக மொத்தம் 14 ஊரணி மற்றும் கண்மாய்களில் பயனாளிகளிடமிருந்து 2,862 மனுக்கள் வரப்பெற்று மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மடை ஊரணியில் மண் அள்ளுவதற்காக முன் அனுமதி பெற்று பயனாளிகள்; தூர் வாரி மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு ஆர்.எஸ்.மடை கண்மாயில் ஆர்.எஸ்.மடை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் பயன்பாட்டிற்காக ரூ.6 லட்சம் மதிப்பில் உறைகிணறு அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி இயக்குநர் (வேளாண்மை) ராஜா, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவர்கள்  உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்