இரத்தினம் கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வியாழக்கிழமை, 18 மே 2017      கோவை

கோவை இரத்தினம் கல்விக் குழுமம் ஐ.எஸ்.டி.சி. மற்றும் ஏ.சி.சி.ஏ. நிறுவனங்களுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கோவை ஈச்சனாரியில் இரத்தினம் கலை மற்றும் அறிவயல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது தனது வணிகம் மற்றும் மேலாண்மைத் துறையில் படிப்பவர்களின் மேம்பாட்டுக்கான அடுத்த கட்ட முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி கல்லூரி சர்வதேசத் திறன் மேம்பாட்டு நிறுவனம் (ஐ.எஸ்.டி.சி) மற்றும் சார்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்கு நிறுவனம் ஆகியவற்றுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

 இது குறித்து கல்லூரியின் தலைவர் மதன் ஆ. செந்தில் கூறியதாவது - இரத்தினம் கல்விக் குழுமம் தனது மாணவர்களின் கல்விதரம் மட்டுமின்றி அவர்களது எதிர் கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேலை வாய்ப்புடன் கூடிய கல்வியை வழங்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டு வருகிறது. இப்போது கல்லூரி ஐ.எஸ்.டி.சி. மற்றும் ஏ.சி.சி.ஏ. நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

பொதுவாக மாணவர்கள் பட்டப் படிப்பை முடித்தவுடன் சார்டாட் அக்கௌவுண்ட் படிப்பை லட்சக்கணக்கில் பணம் செலுத்தி 3 ஆண்டுகளுக்கும் மேல் படிப்பார்கள். ஆனால் தற்போது கல்லூரி செய்துள்ள ஒப்பந்தம் மூலம் பி.காம். மற்றும் எம்.பி.ஏ படிப்பவர்கள் இதனையும் படித்துத் தேர்வு எழுதலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பினைப் பெறலாம். இதனால் மாணவர்கள் கால விரையம் மற்றும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இரத்தினம் கல்விக் குழுமத்தின் இந்த முயற்சி கல்லூரியின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல் என்பதோடு மாணவர்களின் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் இதற்கான நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ரா.மாணிக்கம்இ ஐ.எஸ்.டி.சி. மேலாளர் ஷோன்பாபுஇ ஏ.சி.சி.ஏ. பிராந்திய மேலாளர் சரவணக்குமார்இ வணிக மேம்பாட்டு நிர்வாகி அல்தியாஇ கல்லூரி முதுநிலை ஆலோசகர் ஆர்.சுந்தர்இ இயக்குனர் வி.சேகர்இ துணைப் பேராசிரியர் வினு சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: