ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 18 மே 2017      ஈரோடு
elephant 2

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

13 குழுக்களாக பிரிக்கப்பட்டு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் நடைபெறும் இப்பணியில் வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் சத்திவேல் தலைமையில் வனவர் ராஜன் மற்றும் வேட்டுதடுப்பு காவலர்கள் முன்னிலையிலும், இதேபோல மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் சேகர் தலைமையில், வனவர் சந்திரன் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சரகத்திலும் 13 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: