குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை: முன்னாள் வீரர்கள் சேவாக் - கைஃப் வரவேற்பு

வியாழக்கிழமை, 18 மே 2017      விளையாட்டு
shewag-kaif 2017 5 18

புதுடெல்லி : குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கிரிக்கெட் வீரர்கள் சேவாக், முகமது கைஃப் ஆகியோர் வரவேற்று நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனை
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது.

தண்டனைக்கு தடை


இவ்வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடைவிதித்து நேற்று உத்தரவிட்டது. இவ்வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை வழங்கும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.

சேவாக் வரவேற்பு

தீர்ப்பு வெளியானதும் கிரிக்கெட் வீரர் சேவாக் டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ‘சத்யவமே ஜெயதே’ என அவர் ட்விட் செய்துள்ளார். முகமது கைஃப் தனது ட்விட்டரில், ‘இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். சர்வதேச நீதிமன்றத்திற்கு நன்றி. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது’ என பதிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: