முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்கங்களுக்கு மே- 31-ம் தேதி தேர்தல்: மே 23-ம் தேதி மனுத்தாக்கல்: மாநிலத்தேர்தல் ஆணையர் மோகன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, புதிதாக துவங்கப்பட்ட 6 கூட்டுறவு சங்கங்கள்மற்றும் ஆட்சியர் நிர்வாகத்தில் இருந்துவரும் 3 சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும்தலைவர் /துணைத்தலைவர் ஆகயோருக்கான தேர்தல் வரும் 31 ம்தேதி தேதி நடைபெறும் என்றும்இதற்கான வேட்புமனுத்தாக்கல் 23.ம்தேதி நடைபெறும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கானமாநிலத் தேர்தல் ஆணையர் மோகன், தெரிவித்துள்ளார்.

இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

9 கூட்டுறவு சங்கங்களில் 77 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் 9 தலைவர் மற்றும் 9 துணைத்தலைவர்களுக்கான தேர்தல்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 3 சங்கங்கள், கைத்தறி மற்றும்துணிநூல் இயக்குநர் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 3 சங்கங்கள், மீன் வளத்துறை ஆணையரின் கீழ்வரும் 1சங்கம், பால்பண்ணை அபிவிருத்தி ஆணையர் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 1 சங்கம் மற்றும் தொழில்துறைஆணையர் கட்டுப்பாட்டில் கீழ்வரும் 1 சங்கம் ஆக மொத்தம் 9 சங்கங்களுக்கு 77 நிர்வாகக்குழுஉறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் மற்றும் 9 தலைவர் மற்றும் 9 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது.

இச்சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவேட்புமனு தாக்கல் மே 23-ம் தேதியும், வாக்குப்பதிவு மே 31-ம்தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும்துணைத்தலைவர்களுக்கான தேர்தல் ஜுன் 5.ம் தேதி அன்று நடைபெறும்.இந்த 77 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 8 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிஇனத்தவருக்கும், 22 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல்

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 23 ம்தேதி காலை10.மணி முதல் மாலை 5.மணி வரை தாக்கல் செய்யலாம். மறுநாள் 24.ம்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 4. மணி முதல் 5மணிக்குள் தகுதியானவேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 25.ம்தேதி காலை 10.மணிமுதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்குபோட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.வாக்குப்பதிவுபோட்டி இருப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 31.ம்தேதி அன்று காலை 8. மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்வாக்குகள் எண்ணும் பணி ஜூன்- 1 ம்தேதி காலை 10 மணிக்குத் துவங்கும். வாக்குகள்எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இக்கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்அறிவிப்பு ஜூன்- 1 ம்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இதற்கான தேர்தல் அலுவலரால்வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன்- மாதம் 5ம்தேதி காலை 10.மணிக்கு நடைபெறும்.இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களின் பெயர் விபரங்கள் குறித்து, அந்தந்தசங்கங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களானகூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின்வலைதளம் www.coopelection.tn.gov.in–ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கங்களின் பெயர்விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல்\ஆணையர். ம.ரா. மோகன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago