மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர பரிசோதனைக்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
election-commission 2017 04 03

புதுடெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்து பார்க்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

பரிசோதனை செய்து பார்க்க கட்சிகளுக்கு முறையாக தேதி ஒதுக்கப்பட்டு விரிவான பட்டியல் இன்று  (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இணையதள நேரலையில் விளக்கம்


அரசியல் கட்சிகள் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முன்பாக இணைய தள நேரலையின் மூலம் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் என்றும் அதில் சந்தேகம் உள்ளவர்கள் மீண்டும் தனித் தனியாக அழைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள்

சமீபத்திய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 42 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சை, அடுத்த கட்ட தேர்தல் சீர்திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்களை கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: