முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: முன்னாள் அரசு அதிகாரி குற்றவாளி: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தாவை குற்றவாளியாக அறிவித்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 22ல் தண்டனை விவரம்

குப்தாவோடு சேர்ந்து கோர்பா, சாமாரியா ஆகிய இரண்டு நிலக்கரி துறை முன்னாள் அதிகாரிகளையும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி குற்றவாளிகளாக அறிவித்து சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை விவரங்கள் மே 22ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட ஆடிட்டர்

முன்னாள் அதிகாரிகளை குற்றவாளிகளாக அறிவித்துள்ள நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடையவராக அறியப்பட்டிருந்த ஆடிட்டர் அமித் கோயலை விடுவித்துள்ளது.

மேலும் முறைகேடாக நிலக்கரி உரிமம் பெற முயற்சித்ததாக கே.எஸ்.எஸ்.பிஎல் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளும் இந்த வழக்கில் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கிற்கு தகவல் சொல்லவில்லை

நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 8 வலுவான குற்றச்சாட்டுகள் சிபிஐ தரப்பில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் குப்தா மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்