முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1200 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி அறிவிப்பு: பால், பருப்பு, வெல்லத்திற்கு விலக்கு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பொருட்களுக்கான வரி நிர்ணயம் செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 81 சதவீத பொருட்களுக்கு 18 சதவீதத்தின்  கீழ் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கீழ் பொருட்களுக்கான வரி நிர்ணயம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சுமார் 1200 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பால் பருப்புக்கு விலக்கு

பால், பருப்பு, பனை வெல்லத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோப்பு பேஸ்ட் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பு வரம்பிற்கு கீழ் கொண்டு வரப்பட உள்ளன. தற்போது 11.7 சதவீத  உள்ள நிலக்கரிக்கு இனி 5 சதவீதம்  மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காலணிகள், பெல்ட் உள்ளிட்டவை 28 சதவீதம் வரி விதிப்பு வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

சிறிய ரக கார்களுக்கு வரி ?

சிறிய ரக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் 28 சதவீதம்  வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மேலும் அத்தைகய சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீதம் செஸ் வரியும், டீசல் கார்களுக்கு 3 சதவீதம் செஸ் வரியும் நிர்ணயிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, சுமார் 1,200 பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன என்றார்.

பொருட்களும் வரி விதிப்பு விவரமும்

பட்டியலிடப்பட்டுள்ள 1200 பொருட்களில் எத்தனை சதவீத பொருட்களுக்கு எந்த மாதிரியான வரி விதிப்பு என்பது குறித்த விவரம்

7 சதவீதம் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு
14 சதவீதம் பொருட்களுக்கு 5 சதவீதம்வரி
17 சதவீதம் பொருட்களுக்கு 12 சதவீதம் வரி
43சதவீதம் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி
19சதவீதம் பொருட்களுக்கு 28 சதவீதம் வரி
மொத்தத்தில் 81சதவீதம் பொருட்களுக்கு 18சதவீதம்குறைவாகவே வரி  இருக்கும்.

இந்த வரி விதிப்பு விகிதங்கள், தற்போதைய விவாதங்களின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நுகர்வோர் அதிகம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் 18 சதவீதம் வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என வரி விதிப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்