இஸ்ரோவுக்கு இந்திரா அமைதி விருது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
isro kiran kumar(N)

புதுடெல்லி, 2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் துக்கு (இஸ்ரோ) நேற்று வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதை வழங்க, இஸ்ரோ சார்பில் அதன் தலைவர் கிரண் குமார் பெற்றுக் கொண்டார்.

நினைவுப் பரிசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இவ்விரு துக்கு, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக்குழு இஸ்ரோவை தேர்வு செய்தது.
“செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியது, அமைதி வழி விண்வெளி பயன்பாட்டின் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இஸ்ரோவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி சர்வதேச விருது வழங்கப்படுகிறது” என பாராட்டுச் சான்றிதழில் கூறப்பட்டுள்ளது.


2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதை, அகதிகள் மறுவாழ்வு ஐ.நா. ஆணையருக்கு மன்மோகன் கடந்த ஆண்டு வழங்கினார்.

இதற்கு முன் இந்த விருதை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், நமீபியா தலைவர் சாம் நுஜோமா, கென்ய சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் வாங்கரி மத்தாய், ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: