குல்பூஷண் ஜாதவ் வழக்கு: சுஷ்மாவுக்கு மோடி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
modi(N)

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சிறப்பாக செயல் பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவை யும் அவர் பாராட்டினார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சர்வதேச நீதிமன்ற உத்தரவால் குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினரும் இந்திய மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டு மக்களைக் காப்பதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு


மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியபோது, “சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. பாகிஸ்தானின் மோசடி அம்பலமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கோபால் பாக்லே

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே டெல்லியில்  நிருபர்களிடம் கூறியபோது, “குல்பூஷண் ஜாதவ் வழக்கில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. சர்வதேச நீதி மன்ற உத்தரவை பாகிஸ்தானால் மீற முடியாது’ என்று தெரிவித் துள்ளார்.

ஹரீஷ் சால்வே

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஒரு ரூபாய் கட்டணத்தில் வாதாடி வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வழக்கு குறித்து அவர் கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவ் வழக்கு மிகவும் சிக்கலானது. இந்த வழக்கில் மத்திய அரசு என்னிடம் ஆலோசனை கோரியது. வழக்கு விவரங்கள், வியன்னா ஒப்பந்தத்தை ஆய்வு செய்து எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

தற்போது முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவு பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தக்கூடியது. அதனை பாகிஸ்தானால் மீற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: