முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி முதல் 30 ம் ம் தேதிவரை நடைபெற்றது. இந்த தேர்வினை 10,லட்சத்து 25,ஆயிரத்து 909 பேர் எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 226 மாணவிகளும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 870 மாணவர்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போது மாணவர்களின் மதிப்பெண் அட்டவணை பட்டியல் அனைத்து பள்ளிகளில் ஒட்டப்பட்டதுடன், மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.8 சதவீதம் கூடுதலாகும். மாணவியர்கள் 96.2 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 3.7 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினித்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை 5,059 பள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் 2,232 மேல்நிலைப் பள்ளிகளும், 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.

அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய 5,463 அரசு பள்ளிகளில் , 2,637 மேல்நிலைப் பள்ளிகளும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும். அவற்றில் 100 சதவீதம் தேர்ச்சியை 1,557 அரசுப் பள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளன. அதில் 385 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 1,172 அரசு உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.

இத்தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,613 மாணவர்கள் பெற்று 3.93 சதவீதமும், 451 முதல் 480 மதிப்பெண்களும் 1,22,757 மாணவர்கள் பெற்று 12.50 சதவீதமும், 426 முதல் 450 மதிப்பெண் வரை 1,13,831 மாணவர்கள் பெற்று 11.59 சதவீதமும், 401 முதல் 425 மதிப்பெண்கள் வரை 1,11,266 மாணவர்கள் பெற்று 11.33 சதவீதமும், 301 முதல் 400 மதிப்பெண்கள் வரை 3,66,948 மாணவர்கள் பெற்று 37.36 சதவீதமும், 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 1,92,336 மாணவர்கள் பெற்று 19.58 சதவீதமும், 176 முதல் 200 மதிப்பெண் வரை 15,942 மாணவர்கள் பெற்று 1.62 சதவீதமும், 175 மதிப்பெண்களுக்கு கீழ் 20,404 மாணவர்கள் பெற்று 2.08 சதவீதமும் பெற்றுள்ளனர்.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50 பேர் உட்பட மொழிப்பாடத்தில் 69 பேரும், கணக்கு பாடத்தில் 13,759 பேரும், அறிவியல் பாடத்தில் 17,481 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் ஆங்கிலப்பாடத்தில் ஒருவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறவில்லை.

அதேபோல் பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவர்களில் மொழிப்பாடத்தில் 9,50,206 மாணவர்களில் 96.75 சதவீதமும், ஆங்கிலம் பாடத்தில் தேர்வு எழுதிய 9,59,245 மாணவர்களில் 97.67 சதவீதமும், கணக்கு பாடத்தில் தேர்வு எழுதிய 9,48,402 மாணவர்களில் 96.57 சதவீதமும், அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,77,258 மாணவர்களில் 99.51 சதவீதமும், சமூக அறிவியியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,66,155 மாணவர்களில் 98.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் 88.74 சதவீதம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை 104 பள்ளி பெற்று முதலிடத்தையும், சென்னை மாவட்டத்தில் 3 பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும பெற்றுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறையின் மூலம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் 9,54,995 மாணவர்களுக்கு சென்றுள்ளது.

10 ம் வகுப்பு மாணவர்கள் 25 ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் , தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago