வடகாட்டான்சுவாமி கோவிலில் வினோத திருவிழா: பெண்கள் கலந்து கொள்ளாத இடம்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      ஆன்மிகம்
Vadakattan Swami

Source: provided

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி,கே.புதூர் ஆகிய கிராம மக்கள் சேர்ந்து பிரசித்திபெற்ற ஸ்ரீவடகாட்டான்சுவாமி கோவில் திருவிழா மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும். அதன்படி அதிகாலையில் தங்களுடைய நேர்த்திக்கடன் நிறைவேற்றிவர்கள் காணிக்கையாக 218&க்கும் மேற்பட்ட கிடாக்கல் கோவிலில் கொண்டு வந்து கொடுத்தனர்.

அனைத்தையும் கோவில் முன்பு கிடாவெட்டி பொங்கல் வைத்தும்,பெரிய பாத்திரங்களில் சமைத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோவிலில் சமைக்கும் உணவை அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கோ அல்லது வீட்டிற்கே எடுத்து போக முடியாது.அப்படி எடுத்து போனால் அந்த சாதமும், கோழம்பும் கேட்டு போகுமாம். அதை போல் பெண்கள் இந்த கோவிலுக்கு வர முடியாது,திருநீறும் பெண்கள் பூசமுடியாது. இந்த கோவிலில் நேர்த்திக்கடனுக்காக 65 நாடகங்களும் பதிவாகி நேற்றிலிருந்து நடந்து கொண்டே இருக்குமாம். 

 இந்த வடகாட்டான்சுவாமி கோவிலில் வேண்டுதல்களை சொன்னால் நிறைவேறும், அதுபோல
தங்களுடைய பொருட்கள் காணாமல் போனால் இந்த கோவிலில் ஈடுபோட்டால் உடனே கிடைத்துவிடுமாம், வேண்டுதல் நிறைவேறினால் என்ன நினைத்தார்கலோ அதை கிடாய், வாணவேடி அதை காணிக்கையாக கொண்டுவந்து திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவைக்கான வெளிமாவட்டங்களிலிருந்தும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை கருத்தலக்கம்பட்டி,கே.புதூர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: