ஆவின் ஐஸ்கீரிம் விற்பனை செய்ய புதிய வாகனங்கள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Aavin Van  Rajendra Balaji 2017 05 19

சென்னை, ஆவின் ஐஸ்கிரிம் விற்பனைக்கு சென்னை அடுத்த அம்பத்தூரில் குளிருட்டப்பட்ட வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார்,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில்இரண்டாம் வெண்மைப் புரட்சியை முனைப்புடன் செயல்படுத்தி வரும் ஆவின்நிறுவனம் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப சென்னை மாநகரில் தற்பொழுதுசராசரியாக ரூ.18 கோடி பெருமான பால் உபபொருட்களை மாதம்தோறும்விற்பனை செய்து வருகிறது.சமீபத்தில் ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள 500 கிராம் தயிர்நுகர்வோர்களின் ஆதரவுடன் தற்போது நாளொன்றுக்கு 5000 பாக்கெட் விற்பனையை எட்டியுள்ளது.

இந்நிலையில், அம்பத்தூர் பால் உப பொருட்கள்பண்ணையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ,.ஐஸ்கிரீம் வகைகளை மற்ற மாவாட்ட ஒன்றியங்களுக்குவிநியோகம் செய்ய ரூ.87 லட்சம் மதிப்பில் மூன்று குளிரூட்டப்பட்டவாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆவின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ்,முன்னிலையில் ஆவின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் ஆவின்உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


நுகர்வோர்கள் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க24 மணி நேர நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு இலவச தொலைபேசிஎண் 1800 – 425 -3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டும் தெரிவிக்கலாம். என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: