முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை ரஜினி பாராட்டாதது ஏன்?: தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, ஊழலுக்கு எதிராக போராடும் பிரதமர் நரேந்திர மோடியை ரஜினி பாராட்டாதது ஏன்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினி ‘போர் வரும்போது பார்ப்போம்’ என்று பேசியிருப்பது அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியின் ‘வாய்ஸ்’ பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- சகோதரர் ரஜனிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். அரசியலிலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவர். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவரது பேச்சு எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் யதார்த்தமான நிலைமையை வெளிப்படுத்துவார். ஆனால் இன்று அவரது பேச்சு முரண்பாடாகவே அமைந்து இருக்கிறது. அரசியல் அமைப்பு கெட்டு போய் விட்டது. ஜனநாயகம் கெட்டு விட்டு என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இன்றைய அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பமும் தானே இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசியல் கெட்டுப் போவதற்கு அவர்களும் ஒரு காரணம் தானே? மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கும் ரஜினி மீண்டும் ஏமாற்றத்தை அங்கீகரிப்பது முரண்பாடாக தெரிகிறது. பா.ம.க.வின் அன்புமணி ராமதாசை பாராட்டி இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. அன்புமணி மீதும் வழக்கு இருக்கிறது. திருமாவளவன் தலித்துகளுக்காக பாடுபடுபவர், சீமான் மிகச்சிறந்த பேராளி என்று பாராட்டி இருக்கிறார். இவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததே.

திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் சாதிய பின்புலத்தில் அரசியல் நடத்துபவர்கள். நாட்டில் புரையோடிப் போன ஊழலை ஒழித்து நிர்வாக சீர்கேட்டை சீர்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நடைமுறை சிக்கல்களை தீர்த்து நாட்டை நல்ல பாதையில் வழி நடத்த பாடுபடும் மோடியை அவர் முதலில் பாராட்டி இருக்கலாம். மோடியின் நிர்வாகமும், செயல்பாடும் ரஜினிக்கு தெரியாததல்ல. சிஸ்டத்தில் மாற்றம் வர வேண்டும் என்று ரஜினி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்தி வரும் மோடியை அவர் பாராட்டி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவரை பாராட்ட தயங்கியது ஏன்? 44 ஆண்டுகளாக தமிழக கலைத்துறையில் இருப்பவர். தமிழக மக்களால் வளர்ந்தவர். கலைத்துறையில் இருந்து செய்ய முடியாததை அரசியலுக்கு வந்து செய்வார் என்று நம்புவோம். நடிகர்கள் நாட்டை ஆளக் கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பது பா.ம.க. ஒரு காலத்தில் ரஜினியின் படம் ஓட முடியாத சூழ்நிலை கூட உருவானது. வருங்காலங்களில் தனது படத்துக்கு எதிர்ப்புகள் எந்த மூலையில் இருந்தும் வரக்கூடாது என்பதை சரியாக சமாளிக்கும் வகையிலேயே பேசி இருக்கிறார். பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago