சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: 27-ந் தேதி வெளியாகிறது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
cbse 2016 06 04

சென்னை, சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு நடத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 12-ந் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மாநில பாட வாரியத்தின் தேர்வு முடிவுகள் கடந்த காலங்களை விட சிறிது தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாடவாரியத்தின் (சி.பி.எஸ்.இ) தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது எதிர் பார்ப்பாக உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். இன்னும் ஒரு வாரம் வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து சி.பி. எஸ்.இ அதிகாரிகள் கூறுகையில், சி.பி.எஸ்.இ. 12- வகுப்பு தேர்வு முடிவு தாமதமாக வில்லை. மே இறுதியில் தான் வெளியிடப்படும். இந்த வருடம் 27-ந் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். இந்த வருடம் நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளனர். சென்னை மண்டலத்தில் 59 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: