நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      வேலூர்
vlr

 நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு. அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையில் ஆயுள்கால உறுப்பினர்களுக்கான புரவலர் திட்டத்தினை அபிராமி குருப்ஸ் சேர்மன் அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்து ஏழை குடும்பத்தின் பிள்ளைகள் உயர்கல்வி கற்க அறக்கட்டளை மூலமாக 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். மேல்நிலைக்கல்வி (+2) முடித்து குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாதவர்களை நிதி உதவி வழங்கி ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துவிட விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனை தலைவராக கொண்டு 2012 ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கு உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் அறக்கட்டளை புரவலர் சேர்ப்பு தொடக்க விழா வேலூரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அறக்கடடளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார்.

 

கல்வியின் பெருமை


 

அறக்கட்டளை பணிகள் பற்றி பொருளாளர் கே.ஜவுரிலால், புலவர் பதுமனார், நிதிக்குழு தலைவர் டார்லிங் வெங்டசுப்பு ஆகியோர் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவரும் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் குடும்ப பிள்ளைகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,890 பேர் ரூ.3.16 கோடி கல்வி உதவி பெற்று தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவிகள் 66 சதவிதம் ஆவார்கள். இவர்களில் 78 சதவிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவார்கள். பெண்கள் கல்வி பயின்றால் சமுதாயம் மேம்படும் குடும்பம் மேம்படும் எனவே பெண்களுக்கு கல்வி வழங்குவது அவசியம். நமது முன்னோர்கள் முதற்கொண்டு கல்வியின் பெருமைகளை பற்றி கூறி வருகின்றனர். இந்தியநாடு இளைஞர்களை கொண்டநாடு 127 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாட்டில் 50 சதவிதம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களை முழுமையாக நாம் பயன்படுத்தினால் உலகையே நம்மால் வெல்ல முடியும் அதற்கு கல்வி முக்கியம் அதுவும் தரமான உயர்கல்வி அவசியம். நம்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் நம்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி கூடாது என்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனை எப்படி செய்ய முடியும் என்றால் ஆராய்ச்சி கல்வி அதற்கு உதவியாக இருக்கும். நாட்டில்30 சதவிதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களை மேலே கொண்டுவர வேண்டும். நாட்டில் உயர்கல்வி படிக்க தகுதியுள்ள14 கோடி பேர்களில்3.50 கோடி பேர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.நாட்டில்700 பல்கலைக்கழகங்கள் 40,000 கல்லூரிகள் இருந்தும் அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளைமத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கிறது மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் அதை மாற்றதான் இந்த அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை.

 

மனிதனுக்கு உணவு

 

கல்வி என்பது மனிதனை முழு மனிதனாக மாற்றும் திறன் படைத்தது.ஒழுக்கம் கட்டுபாடு கற்றுதருவது. அத்தகைய கல்வி குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்பு உள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த அறக்கட்டளை மூலம் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது அதனால் அதிக நிதி தேவைபடுகிறது இதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் அறக்கட்டளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் நிதிவழங்கி புரவலராக சேரலாம் என்று பேசினார். நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ஏ.புவனேஸ்வரி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மனிதனுக்கு உணவு கொடுப்பதை விடகல்வி கொடுப்பது உயர்வானது என்று கூறுவார்கள் அதன்படி படிக்க தகுதியிருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு பெற முடியாதவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி தரும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருவது பாராட்டுக்குறியது. பாரத ஸ்டேட் வங்கி சமுதாய நலனுக்கான பணிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் சென்னை அபிராமி மெகா மால் சேர்மன் ரொட்டேரியன் அபிராமி ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் புரவலராக சேரும் திட்டத்தினை தொடங்கி வைத்து அறக்கட்டளை மூலமாக 911 மாணவ மாணவியர் உயர்கல்வி பயில கல்வி உதவி நிதியாக ரூ.58 லட்சம் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை டிரஸ்டிகள் முனைவர் ஜெயகரன் ஐசக் முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதில் 40 க்கும் மேற்பட்டோர் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் நிதி வழங்கி அறக்கட்டளை புரவலர்களாக பதிவு செய்தனர். முடிவில் அறக்கட்டளை திட்ட அலுவலர் முத்துவீரன் நன்றி கூறினார்.

 

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: