முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரமானியம் நேரடியாக வழங்கும் திட்டம் தொடர்பான பயிற்சி முகாம்: கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான நேரடி உர மானியத்திட்ட பயிற்சி முகாமினை நாமக்கல் கலெக்டர் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (19.05.2017) துவக்கி வைத்தார்.

பயிற்சி முகாம்

உரம் கடத்தலைத் தடுக்கவும் விவசாயிக்கான உரமானியம் விவசாயிகளுக்கு மட்டுமே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ஜுன் முதல் தேதியிலிருந்து (1.06.2017) நாடு முழுவதும் நேரடி உரமானியம் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இனி விவசாயிகள் ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு இருந்தால் மட்டுமே மானிய விலையில் உரங்களை வாங்க முடியும்.

நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு பயன்படும் உரங்களுக்கு ஆண்டு தோறும் சுமார் 74000- கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இதன்படி தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா, சூப்பர், பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு ஆகிய உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரங்களுக்கான மானிய தொகையை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வந்தது. முதலில் உர சப்ளை தொடர்பாக உர நிறுவனம் அளிக்கும் தகவல் அடிப்படையிலும் பின்னர் வேளாண்மை துறை அலுவலர்களின் சான்றிதழ்களின் அடிப்படையிலும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உரத்துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக உரமானியம் நேரடியாக உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடையவும் மானிய விலை உரம் கடத்தப்படுவதை தடுக்கவும் பயோ மெட்ரிக் தொழில்நுட்ப அடிப்படையில் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி இத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சமையல் கேஸ் மானிய முறையை போன்று நாடு முழுவதும் வரும் ஜுன் முதல் தேதி அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழகத்திலும் நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேளாண்மை வேளாண்மைத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதன்படி வரும் ஜுன் முதல் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்து விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும் இதற்காக ஏற்கனவே தமிழக ரேசன் கடைகளில் பயன்பாட்டில் உள்ளது போன்று பயோ மெட்ரிக் அடிப்படையில் பொதுமக்களின் ஆதார் விவரங்கள் அடங்கிய பிஓஎஸ் (Pழுளு) எனப்படும் "பாய்ண்ட் ஆப் சேல்ஸ்" விற்பனை செயலி கருவிகள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளன. தலா ரூ.27500- மதிப்புள்ள இந்த கருவியை உர நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

இந்த புதிய முறை குறித்து இப்போது தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உரம் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேரடி உர மானிய முறைக்கான உர நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 218 தனியார் உர விற்பனையாளர்களுக்கும் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜுன் முதல் தேதி முதல் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் மற்றும் விரல் ரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உரமானியம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இப்போது ஆதார் எண் உள்ள அனைவருக்கும் உரத்தை எவ்வளவு வேண்டுமானலும் பெற முடியும் ஆனால் விரைவில் இதையும் முறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வட்டாரம் மற்றும் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது அவருக்கு எந்த பயிருக்கு எவ்வளவு உரம் தேவைப்படும் அதற்கான மண் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மண்வள அட்டை வழங்கப்பட்டடு உரம் பரிந்துரைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர்ஃநேர்முக உதவியாளர் வேளாண்மை கலெக்டர்ஆர்.சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர். கலெக்டர்பொ.பாலமுருகன் இத்திட்டம் பற்றி முக்கியத்துவத்தினை அனைவருக்கும் எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கலெக்டர்எஸ்.சின்னசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சேர்ந்த கலெக்டர்அருண்குமார் மற்றும் கலெக்டர்இராமர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை துணை இயக்குநர்கள் கலெக்டர்ப.கணேசன் மற்றும் கலெக்டர்ஆர்.வரதராஜ் உட்பட வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்கள் கலெக்டர்சி.பாபு கலெக்டர்தி.அன்புச்செல்வி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago