தமிழக சட்டசபை விரைவில் கூட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
CM palanisamy(N)

ஊட்டி, தமிழக சட்டசபை விரைவில் கூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஊட்டி மலர் கண்காட்சி விழா முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்துக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். ஊட்டி பஸ் நிலையத்தை நவீனப்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஏற்கனவே ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகளும் விரைவாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மலர் கண்காட்சியை சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.


இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இதைதொடர்ந்து நிருபர்கள், தமிழக சட்ட பேரவை எப்போது கூட்டப்படும்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘ தமிழக சட்ட பேரவை விரைவில் கூட்டப்படும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: