முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்கு மண் எடுக்கவுள்ள இடம்: கலெக்டர்வா.சம்பத், ஆய்வு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      சேலம்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மேட்டூர் அணையிலிருந்து விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்கவுள்ள இடத்தினை கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், நேற்று (19.05.2017) ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

 

 

கலெக்டர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டங்களான ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமாரமத்து பணி திட்டம் மற்றும் விவசாய நிலங்களில் வளத்தினை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மண்களை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மேட்டூர் அணையில் உள்ள வண்டல் மண்களை அதிக அளவிலான விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்கு விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் மேட்டூர் அணையில் தொடர்புடைய அலுவலர்களுடன் வண்டல் மண் எடுபபதற்கு உரிய இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 952 ஏரி, குளம், குட்டை, வாய்க்கால்கள் வண்டல் மண் அள்ளுவதற்கு தகுதியானவை என கண்டறியப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகளிலிருந்து இதுவரை 39,946 கன மீட்டர் அளவு வண்டல் மண்கள் 1,305 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு இதுவரை 2,160 விவசாயிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவினை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தந்த வட்டாட்சியர்கள் உடனடியாக பரிசீலித்து அனுமதி ஆணை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்களுக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்வதில் விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், தெரிவித்தார்.

இந்த ஆய்வினை தொடர்ந்து கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், மேட்டூர் சார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரநிதிகளுடன் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கனிமவளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் இது குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த ஆய்வின் போது மேட்டூர் சார் கலெக்டர் கலெக்டர்மேகநாதரெட்டி, , கனிம வளத்துறை துணை இயக்குநர் கலெக்டர்ஆறுமுகநைனார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலெக்டர்மணிக்குமார், பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் கலெக்டர்வசந்தம், வட்டாட்சியர் கலெக்டர்கே.வீரப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago