முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி, சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு: கவுன்சில் கூட்டத்தில் முடிவு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கல்வி, சுகாதாரத்திற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது. ஜி.எஸ்.டி சட்டம் குறித்த இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

இறுதி முடிவு

இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிஅமைச்சர்அருண்ஜெட்லி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கு விலக்கு

மொத்தத்தில் நான்கு விதமான வரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5%, 12% மற்றும் சராசரியாக 18 % இறுதியில் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என வரி விதிக்கப்படும். பெரும்பாலும் போக்குவரத்து சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி மசோதா நுகர்வோருக்கு ஏதுவானதாக இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.-யில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றார். முன்னதாக பாலுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் விலையும் கண்டிப்பாக குறையும் என்று கூறப்பட்டது.

பொதுவாக வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5, 12, 18, 28 என்ற சதவீத அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. பெரும்பாலான பொருட்கள் 18 சதவீதம் வரி என்ற பிரிவின் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன.

வரியில்லா பொருட்கள்:

இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், தேன், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பிரெட், கோயில் பிரசாதங்கள், உப்பு, குங்குமம், பொட்டு, தபால் தலைகள், முத்திரைத் தாள்கள், புத்தகங்கள், செய்திதாள்கள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை.

5 சதவீதம் வரி :

மீன் பொருட்கள், க்ரீம், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பிராண்டட் பன்னீர், உலர் காய்கறிகள், காபி, டீ, மசாலா பொருட்கள், பீசா பிரட், ரஸ்க், ஜவ்வரிசி, மண்ணெண்ணைய், நிலக்கரி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், படகுகளில் உயிர் காக்கும் சாதனங்கள்.

12 சதவீதம் வரி :

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், வெண்ணை, பாலாடை, நெய், பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள், மிருக கொழுப்புக்கள், பழச்சாறுகள், நாய் உணவுகள், ஆயுர்வேத மருந்துகள், பல்பொடி, அகர்பத்தி, வண்ணப் பயிற்சி புத்தகங்கள், படங்களுடனான புத்தகங்கள், குடை, தையல் மிஷின், மொபைல் போன்கள்.

18 சதவீதம் வரி :

பெரும்பாலான பொருட்கள் இந்த பிரிவின் கீழே வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்பிளக்ஸ், கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் வகைகள், ஐஸ்க்ரீம், துரித உணவு மசாலாக்கள், மினரல் வாட்டர், டிஸ்யூ பேப்பர்கள், என்வலப் கவர்கள், நோட்கள், இரும்பு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள்.

28 சதவீதம் வரி :

சூயிங்கம், மொலாசஸ், கொக்கோ சேர்க்கப்பட்டாத சாக்லேட்கள், சாக்லேட் உடனான மொறு மொறுப்பு உணவுகள், பான் மசாலா, சோடா போன்ற நுரைதன்மை கொண்ட பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், ஷாம்பூ, டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஸ்வாசர், வெயிட் மிஷின்கள், வாஷிங் மிஷின், ஏடிஎம், வென்டிங் மிஷின்கள், வாக்யூம் க்ளீனர், ஷேவிங் பொருட்கள், ஹேர் க்ளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகள்.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago