கும்மிடிப்பூண்டியில் 10வது வருடமாக 100சதவீத தேர்ச்சி பெற்ற கலைமகள் மெட்ரிக் பள்ளி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      சென்னை

கும்மிடிப்பூண்டியில் உள்ள கலைமகள் மெட்ரி்க் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 10வது வருடமாக 10ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.இந்தப் பள்ளியில் இந்த வருடம் 10ஆம் வகுப்பில் 72 பேர் படித்து வந்த நிலையில் தேர்வு முடிவுகளில் 72 பேரும் தேர்ச்சி அடைந்து 10ஆம் வகுப்பு தேர்வில் தொடர்ச்சியாக 10வது வருடமும் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளது.

பாராட்டு

பள்ளி மாணவர் என்.எச்.சர்வேஷ் குமார் தமிழில் 98, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 99, அறிவியலில் 98, சமூக அறிவியலில் 97 என 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அதே போல பள்ளி பள்ளி மாணவிகள் கே.செளமியா தமிழில் 95, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 100, அறிவியலில் 97, சமூக அறிவியலில் 98 என 500க்கு 487 மதிப்பெண்களும், டி.விஷ்ணுபிரியா தமிழில் 95, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 98, அறிவியலில் 97, சமூக அறிவியலில் 99 என 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

பள்ளி மாணவர் எம்.பாலமுருகன் தமிழில் 96, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 97, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 என 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். பள்ளி மாணவர்கள் செளமியா கணிதத்தில் 100 மதிப்பெண்களும், எம்.பாலமுருகன் அறிவியலில் 100 மதிப்பெண்களும், ஜெ.சந்தோஷ், கே.சதீஷ்குமார் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்களும் பெற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திருஞானம், தலைமை ஆசிரியர் தேன்மொழி திருஞானம், நிர்வாகி டாக்டர் ஞானதீபன் ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: