செங்குன்றத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதி விபத்து : பாலிடெக்னிக் மாணவன் பலி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      சென்னை

சென்னையடுத்த செங்குன்றம் சக்திகான்மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மெக்கானிக் செட் நடத்திவருகிறார். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 19). இவரும், இவரது சித்தப்பாவின் மகன் அதேப்பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் மனோஜ்குமார் (வயது 15). ஆகிய இருவரும் செங்குன்றம் பஜாரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது செங்குன்றம் காவல்நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே செங்குன்றத்தை சேர்ந்த காமேஷ்ராஜ் மோட்டார்சைக்கிளில் எதிரில் வந்தார்.

லாரி மோதல்

அப்போது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் கீழே விழுந்த ஸ்ரீதர் மீது நெல் ஏற்றிவந்த லாரி ஏறியிறங்கியது. பலத்த காயங்கள் ஏற்பட்ட ஸ்ரீதரை ஆஸபத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக செத்தார். மனோஜ்குமாரும், காமேஷ்ராஜீம் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இறந்துபோன ஸ்ரீதர் சென்னை தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா , சப்இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செங்குன்றம் குப்பாமணிதோப்பை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: