முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கும் கலெக்டர் சிவஞானம் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம் கடந்த மார்ச் 2017-இல் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் உள்ள 340 பள்ளிகளைச் சேர்ந்த 28,574 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 28,160 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 98.55 பெற்று விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 14,109 மாணவர்களில் 13,731 பேர் தேர்ச்சி பெற்று 97.95மூ தேர்ச்சி சதவீதமும், தேர்வு எழுதிய 14,555 மாணவிகளில் 14,427 பேர் தேர்ச்சி பெற்று 99.13மூ தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 340 பள்ளிகளில் 109 அரசு பள்ளிகளும், 36 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 84 மெட்ரிக் பள்ளிகளும் ஆக மொத்தம் 229 பள்ளிகள் 100மூ தேர்ச்சி பெற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களும், முயற்சி எடுத்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மனோகரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்