முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ்காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி  துணை ஆணையாளர் திரு.ப.மணிவண்ணன்,  தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள்   எடுத்துக் கொண்டனர்.
 முன்னாள் பாரத பிரதமர் அமரர் இராஜுவ்காந்தி நினைவுதினமான மே 21ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 உறுதிமொழி
 அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்று அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோன்று மண்டல அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (கணக்கு) திரு.கருப்பையா, மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்