திருவாரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் - 2(ஏ) தேர்வுக்கு இலவச பயிற்சி : கலெக்டர் இல.நிர்மல் ரஜ் தகவல்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருவாரூர்

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2() தேர்வு மூலம் 1953 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி நாள் 26.05.2017 இதற்கான எழுத்துத்தேர்வு 06.08.2017-ல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி


இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும்; 23.05.2017 செவ்வாய்க்கிழமை முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும்; வழங்கப்படும். மாதிரித்தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்; தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், ஆகியவற்றுடன் 23.05.2017 அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு சு..டு நகா,; மன்னார்குடி ரோடு, விளமல் அஞ்சல், கூட்டுறவு நகர் பஸ் நிறுத்தம், திருவாரூரில் உள்ள புதிய முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சொந்த செலவில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் இ,.., தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: