முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 96.29 சதவீதம் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      கரூர்

 

கரூர் மாவட்டத்தில், மார்ச் 2017-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 6590 மாணவர்கள், 6417 மாணவிகள் ஆக மொத்தம் 13007 பேர் தேர்வு எழுதினர். இதில் 6204 மாணவர்கள் மற்றும் 6179 மாணவிகள் ஆக மொத்தம் 12383 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களில் 94.14மூ, மாணவிகளில் 96.29 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி 95.20 சதவிகித தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட (96.67சதவீதம்) 1.47 சதவிகிதம் குறைவான தேர்ச்சியாகும்.

கரூர் மாவட்டத்திலுள்ள 190 பள்ளிகளில் 90 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 31 பள்ளிகள் அரசு பள்ளிகளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்