மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      திருச்சி
Trichy 2017 05 19

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி, நாகமங்கலம், பாகனூர், .குட்டப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடியில் ரூபாய் 5 இலட்சத்து 34 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டப்பாறைப்பட்டியில் சுற்றுச் சுவர் கட்டும் பணி, ரூபாய் 2 இலட்சத்து 22 ஆயிரம் செலவில் அம்பேத்கார் நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி, நாகமங்கலத்தில் ரூபாய் 1 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் முதலமைச்சரின் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் அமைக்கும் பணி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கே.கள்ளிக்குடி ஊராட்சி, கலிங்கப்பட்டியில் ரூபாய் 3 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகனூரில் ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் செலவில் தொகுப்பு வீடு கட்டும் பணி, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 39 இலட்சத்து 97 ஆயிரம் செலவில் இனாம்குளத்தூர் - மாத்தூர் - பாகனூர் சாலைகள் பலப்படுத்தும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கே.கள்ளிக்குடியில் ரூபாய் 20 இலட்சம் செலவில் சமுதாயக் கூடம் கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ந.குட்டப்பட்டு, மணல்மேட்டில் ரூபாய் 2 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் மாட்டு கொட்டகை கட்டும் பணி, ரூபாய் 1 இலட்சத்து 70 ஆயிரம் செலவில் அம்பேத்கார்நகரில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி என மொத்தம் ஒரு கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், லதா, உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், ஜெயக்குமார், ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: