பெரம்பலூர் மாவட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      பெரம்பலூர்
Perambalur 2017 05 19

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அருமடல் கிராமத்தில் (17.05.2017) அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் அருமடலை சேர்ந்த முருகேசன், மணி ஆகியோர்களது வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து முற்றிலும் நாசமாயின.

நிவாரண உதவி

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர் ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அரசின் நிவாரண உதவிகளான இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.2,500- வீதம் ரூ.5000-க்கான தொகை, வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 2 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வின்போது; வட்டாட்சியர்(.பா.தி) சிவக்குமார் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: